states

img

மேற்குவங்காளத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க தடை

மேற்குவங்காளத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  

கொல்கத்தா – மேற்குவங்காளத்தில் கொரோனா காலத்தில் பண்டிகை கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பது தொற்று பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும் மேற்குவங்காளத்தில் பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்கவும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு இன்று சபயாசாச்சி பட்டாச்சார்யா, அனிருதா ராய் ஆகிய நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தீபாவளி, காளி பூஜை, சாத் பூஜா, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்தார்.  

மேலும் தடைளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். 

;